Tuesday, August 10, 2010

ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு

 அடுத்த முறை நீங்க ஏடிஎம்மில் பணம் எடுக்க நுழைந்ததும், எந்திரத்தின் பட்டன்களில் ஏதாவது அழுந்தியிருக்கிறதா என்பதை கவனியுங்க. பசை, ஸ்க்ரூ டிரைவர், நகம்வெட்டி பயன்படுத்தி உங்கள் பணத்தை திருடர்கள் கொள்ளையடிக்க கூடும்.அதில் லேட்டஸ்ட் டெக்னிக் இதோ:
கணக்கில் பணம் இல்லாத ஒரு டெபிட் கார்டை கதவில் இருக்கும் கருவியில் நுழைத்து உள்ளே நுழைவார் மிஸ்டர் திருடர். கார்டை உள்ளே செலுத்த தேவையில்லாத, செருகிவிட்டு வெளியே எடுத்து விடும் வசதியுள்ள ஏடிஎம்களே அவரது குறி. (எஸ்பிஐ, பிஓபி உட்பட அரசு, தனியார் வங்கிகள் சிலவற்றில் இந்த வகை ஏடிஎம்களே உள்ளன)
ஏடிஎம் கீபோர்டில் ஒரு பட்டனை அழுத்தி விட்டு, மீண்டும் அது மேலே வராமல் பட்டன்களுக்கு இடையே பசையை தடவி ஒட்டி விடுவார். பட்டனை அழுத்தியதும் மெஷின் ஆன் ஆகிவிடும். பிறகு, வெளியேறி விடுவார் மிஸ்டர் திருடர்.
அடுத்த அப்பாவி உள்ளே வருவார். திரையை கவனிக்காமல் நேராக கார் டை தேய்த்து வெளியே எடுப்பார். பின் நம்பர் கேட்கும். பட்டனை அழுத்துவார். ஏற்கனவே ஒரு பட்டன் அழுத்தப்பட்டிருப்ப தால் பாதுகாப்பு அம்சங்களின்படி தவறான டிரான்சாக்ஷனாக கருதி ஸ்கிரீன் ஆப் ஆகிவிடும்.
அடுத்ததாக காத்திருக்கும் மிஸ்டர் திருடர், ‘எவ்ளோ நேரம் சார். வெளி யே வாங்க, நாங்க போனதும் டிரை பண்ணுங்க’ என்று சத்தம் கொடுப்பார்.
அப்பாவி வெளியேறியதும், உள்ளே நுழையும் மிஸ்டர் திருடர், கையடக்கமான ஸ்க்ரூ டிரைவர், நகம்வெட்டியால் பசையுள்ள பட்டனை ரிலீஸ் செய்வார். ஸ்கிரீன் டிஸ்பிளே ஆகும். ஏற்கனவே டைப் செய்யப்பட்ட கடைசி பின் நம்பர் மெமரியில் இருக்கும் என்பதால், எவ்வளவு வேண்டுமோ பணத்தை குறிப்பிட்டு எடுத்துக் கொண்டு ஜென்டிலாக வெளியேறுவார் மிஸ்டர் திருடர்.

2 comments:

Mohamed Faaique said...

oh! my god...

Unknown said...

சில திருட்டு எண்ணம் உள்ளவர்களுக்கு நாம் எப்படி அறிவுடன் செயல்பட்டாலும் திருடத்தான் செய்வார்கள்.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

Related Posts with Thumbnails
 

Blogger