Friday, August 20, 2010

கணக்கு படித்தால் கை நிறைய சம்பளம்

ஒரு காலத்தில் கணக்கு என்றாலே மாணவர்கள் காத தூரம் ஓடியதுண்டு. இன்று நிலைமை தலைகீழ். ‘சென்டம்’ எடுப்பவர்களின் எண்ணிக்கை கணக்கில்தான் அதிகம். வேலை வாய்ப்பில் அதிக வருமானம் பார்ப்பது யார் என்பது பற்றி சுமார் 200 துறைகளில் பணிபுரியும் அலுவலர்களிடம் கடந்த ஆண்டு கணக்கெடுப்பு நடத்தியது அமெரிக்கா. சர்வதேச சாதனையாளர்கள், அவர்கள் சாதனை புரிந்த துறை மற்றும் அதிக வருமானம் பார்த்தவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் 10 இடங்களை பிடித்து அசத்தியுள்ளவர்களில் 6 பேர் கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள், இன்சூரன்ஸ், நிதி சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்தவர்கள், புள்ளி விவர கணக்காளர், கணக்கர்.
கணக்கு துறையை சேர்ந்தவர்கள் பட்டியலை ஆக்கிரமித்திருப்பது ஆரோக்கியமான விஷயம். அவர்கள் வாங்கும் சம்பளம் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. இவர்கள் அனைவருமே அறிவியல் துறையில் விருப்பமாக இருந்து, பின்னர் வேலைக்காக படிப்படியாக கணக்கில் தங்களை வளர்த்துக் கொண்டு உலக சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கணக்கு வல்லுநர்கள் பங்கேற்கும் சர்வதேச கருத்தரங்கு (ஐசிஎம்&2010)ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து கணக்கில் சாதனை படைத்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 2 முறை சர்வதேச விருதுகளை வென்ற மாசாசூசெட் தொழில்நுட்பக் கழக சாப்ட்வேர் இன்ஜினியர் மதுசூதன் கூறுகையில், ‘தகவல் தொழில்நுட்பத்துறையின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம் கணக்கு தான்’ என்கிறார். கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் அடிப்படையே அல்ஜீப்ரா, ப்ராபபிலிட்டி தியரி. இவை கணக்குடன் தொடர்புடையதுதான் என்கிறார்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 90 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் கணக்கியல் வல்லுநர்கள் பங்கேற்றுள்ள இந்த கருத்தரங்கில், முதல்முறையாக 300 பெண் கணக்கியல் வல்லுநர்களும் கலந்து கொள்கின்றனர் என்பதுதான் ஹைலைட்டான விஷயம்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger