Friday, August 13, 2010

காதலோ, கல்யாணமோ... சீக்கிரம்!

 சிலர் பெற்றோர் பார்க்கும் பெண்ணை மணமுடிக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பார்கள். சிலரோ காதலித்தே திருமணம் செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருப்பார்கள். எப்படியானாலும் சரி. கூடிய சீக்கிரம் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுங்கள். பெண் கிடைப்பது தாமதமானால் ஆயுள் குறையும் என்று எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
வசதியான, அழகான ஆணுக்கு பல பெண்கள் போட்டி போடுவதும் ஒரே பெண்ணின் பின்னால் பல ஆண்கள் சுற்றுவதும் உலகம் முழுவதும் நடக்கிறது. இப்படி வாழ்க்கைத் துணையை தேர்வு செய்ய நீண்ட போட்டிகளை சந்தித்து அதிக காலம் காத்திருப்பது உடல்நலத்தை பாதிக்கிறதா என்பது குறித்து அமெரிக்காவின் விஸ்கோன்சின், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஹாங்காங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சேர்ந்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.
1957&ல் விஸ்கோன்சின் பள்ளியில் படித்த 4183 பேரின் உடல்நிலையில் கடந்த 50 ஆண்டுகளாக ஏற்பட்ட மாற்றங்கள், பாதிப்புகள் ஆகியவற்றை அலசினர். இதில் தெரியவந்த தகவல் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியது:
சில வகுப்புகளில் மாணவிகள் அதிகம் இருந்தனர். சில வகுப்புகளில் குறைவாக இருந்தனர். குறைவான மாணவிகள் படித்த வகுப்புகளில் அவர்களுடன் பழகுவதற்கு மாணவர்கள் அதிகம் போட்டியை சமாளிக்க வேண்டி இருந்தது. இத்தகைய வகுப்புகளில் படித்தவர்கள் குறைவான நாட்களே வாழ்ந்துள்ளனர். ஜோடி கிடைக்க போட்டிகளை சந்திக்கும் ஆண்களுக்கு வாழ்நாள் குறைவு என்பது இதன்மூலம் தெரிகிறது.
காதலிகள் உடனே ‘பிக்கப்’ ஆகிறவர்களைவிட தாமதமாக ‘பிக்கப்’ ஆகிறவர்களின் வாழ்நாள் குறைந்தபட்சம் 3 மாதமாவது குறைந்துள்ளது.
காதலி, மனைவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது மனதை அதிகம் பாதிக்கிறது. தினமும் மண்டையை பிளக்கிற தலைவலி ஏற்படுவதற்கு நிகரானது இந்த மன அழுத்தம்.
இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காதலி பிக்கப்போ, கல்யாணத்துக்கு வரன் பார்ப்பதோ சட்டுபுட்டென்று முடியுங்கள் என்று அட்வைசும் செய்கின்றனர். 
 
இன்றிலிருந்து நமது சுட்டி பையனில் புதிய பகுதி "இன்று ஒரு தகவல்"
இதில் உபயோகமான புது புது தகவல்கள் இடம் பெரும்.
இன்று ஒரு தகவல்
இன்று ஒரு WEB SITE பற்றிய தகவல்களை அறிய கீழ்கண்ட இணையதள முகவரியில்
தேடவும்.
www.websiteoutlook.com
www.whois.com 



0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger