முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால், தீபாவளிக்கு முன்னதாக 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 20 ஆயிரத்தைத் தொடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதி நெருக்கடிக்குப் பிறகு தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. முதலீடு பாதுகாப்பாக இருப்பதே இதற்குக் காரணம். தேவை அதிகரித்ததால் அதன் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,260 டாலரை தாண்டியது. இந்தியாவில் 24 காரட் 10 கிராம் தங்கம் விலை 19 ஆயிரத்தைத் தாண்டியது.
பின்னர் சற்று குறைந்திருந்த தங்கம் விலை, மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி என் பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதாலும் திருமண சீசன் தொடங்கி இருப்பதாலும் தங்கத்துக்கான தேவை இனி அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
‘‘இப்போது 10 கிராம் தங்கம் விலை 19 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பண்டிகை விற்பனை சூடுபிடிக்க உள்ளதால் தீபாவளிக்கு முன்னதாக 20 ஆயிரத்தைத் தொடும்’’ என மும்பை தங்கம் விற்பனையாளர்கள் சங்கத்தின் (பிபிஏ) தலைவர் சுரேஷ் ஹண்டியா தெரிவித்துள்ளார்.
உலகிலேயே தங்கம் அதிக அளவில் விற்பனையாகும் நாடு இந்தியாதான். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, முதல் 6 மாதங்களில் விற்பனை 94 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 188 டன்னாக இருந்த விற்பனை, இந்த ஆண்டு 365 டன்னாக அதிகரித்துள்ளது. ‘‘திருமண சீசன் மற்றும் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் இந்த ஆண்டு இறுதி வரையிலும் தங்கத்துக்கான தேவை அதிகரிக்கும்’’ என உலக தங்க கவுன்சில் நிர்வாக இயக்குநர் அஜய் மித்ரா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment