Saturday, August 7, 2010

கார் இனி காற்றில் ஓடும்

 ஏறிவரும் பெட்ரோல் விலை வாகன ஓட்டிகளை பாடாய் படுத்தி வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தந்திருக்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள். ஆம்..பெட்ரோலுக்கு பதில் காற்றை, எரிபொருளாக பயன்படுத்தி காரை ஓட வைக்கலாம் என்கிறார்கள்.
மண்ணில் வாழும் ஒரு வித பாக்டீரியா உருவாக்கும் என்ஸைம் மூலம் காற்று எரிபொருளை தயாரிக்கலாம் என்று சொல்லும் விஞ்ஞானிகள் இந்த காற்று எரிபொருள் சுற்று சூழலுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற காதுக்கு இனிய செய்தியையும் தருகிறார்கள். கார்பன் நியூட்ரல் கிரீன் எரிபொருள் எனப்படும் இந்த எரிபொருளை பயன்படுத்தி கார் இஞ்சினை இயக்கலாமாம்.
‘அசோட்டோபாக்டர் வினேலன்டி’ எனும் ஒரு வகை பாக்டீரியா தாவரங்களின் வேர்களை சுற்றியுள்ள மண்ணில் வாழ்கிறது. இந்த பாக்டீரியா ‘வனேடியம் நைட்ரோஜினேஸ்’ எனும் என்ஸைமை உருவாக்குகிறது. இந்த என்ஸைம் நைட்ரஜன் வாயுவிலிருந்து அம்மோனியாவை தயாரிக்கும். ஆனால் இப்போது புரோப்பேன் எனும் வேதிப்பொருளையும் உருவாக்குவதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த புரோப்பேனை பயன்படுத்திதான் எரிபொருளை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான மார்க்கஸ் ரிப்பே இதுபற்றி கூறும்போது, வனேடியம் நைட்ரோஜினேஸ் என்ஸைம், புரோப்பேனில் எளிய கார்பன் சங்கிலியை உருவாக்குகிறது. இந்த எளிய கார்பன் சங்கிலியை, நீளமான கார்பன் சங்கிலிகளாக மாற்றும் போது கிடைக்கும் வேதிப்பொருளை சிந்தட்டிக் எரிபொருளாக நாம் பயன்படுத்தலாம், எனவே காற்றுடன் பாக்டீரியாவை வினைபுரிய வைத்து புதிய வகை எரிபொருளை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம்’’ என்கிறார்.
வாகனங்களில் பெட்ரோலை பயன்படுத்தும் போது கார்பன் மோனாக்ஸைடு வெளியாகி சுற்றுசூழலை மாசுபடுத்துகிறது. ஆனால் இந்த புதிய வகை காற்று எரிபொருளில் அந்த பிரச்சனையும் இல்லை என்கிறார் மார்க்கஸ்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger