சிங்கப்பூர் விமானத்தில் வந்த பயணியின் இரண்டரை கிலோ தங்கத்தை ஜட்டிக்குள் வைத்து கடத்திக்கொடுக்க முயன்ற விமான நிலைய ஊழியர் பிடிபட்டார்.
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வந்தது. பயணிகளின் பொருட்களை குடியுரிமை அதிகாரிகள் சோதித்தனர். அப்போது, ஜெட் லைட் விமானத்தில் லோடராக பணியாற்றும் கணேசன் (26) வரிசையில் நின்றார். “உனக்கு இங்கே என்ன வேலை“ என்று அதிகாரிகள் கேட்டபோது சரியான பதிலை கூற முடியாமல் திணறினார். இதனால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்றனர். பேன்ட், சர்ட்டுகளை கழற்றியபோது ஜட்டிக்குள் பெரிய பார்சலை பதுக்கிவைத்திருப்பது தெரிந்தது.
அவற்றை பிரித்தபோது ரூ.36 லட்சம் மதிப்புடைய இரண்டரை கிலோ புத்தம்புதிய செயின்கள், மோதிரங்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கணேசன் கூறுகையில், “ சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணி இந்த தங்கத்தை கொடுத்தார். விமான நிலையத்துக்கு வெளியே கொண்டுவந்து கொடுத்தால் 5 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார். இதனால் ஜட்டிக்குள் வைத்து கடத்தினேன்” என்றார்.
இதையடுத்து, கணேசன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் வந்த பயணி யார், கணேசனுக்கும் அவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருக்கிறதா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
விமான நிலையத்தில் வேலை செய்யும் ஊழியரே தங்கம் கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2 comments:
Congrats
THANK YOU SIR
MR.KOLIPAIYAN(SUPER TITLE)
Post a Comment