Friday, April 23, 2010

ஐ பி எல் விளையாட்டு (கண்ணாமூச்சி)

ஐபில் அணி தொடர்பாக தினந்தோறும் புதுப்புது மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து தகவல் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பா.ஜனதா தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இப்பிரச்னையை எழுப்பிய எதிர்கட்சி உறுப்பினர்கள், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு ஐபிஎல் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஐபிஎல் அணி ஏல விவகாரத்தில் நிகழ்ந்த நிதி முறைகேடுகள் மற்றும் சூதாட்டங்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், இது விடயத்தில் ஐமுகூ அரசு ஆளும் கூட்டணியை பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை காட்டுவதாகவும், ஐபிஎல் சர்ச்சையில் தொடர்புடைய அமைச்சர்களுக்கு ( பிரஃபுல் படேல், ஷரத் பவார்) எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாற்றினார்கள்.தொடர்ந்து பேசிய பல்வேறு எதிர்கட்சி உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்திய நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஐபிஎல் சர்ச்சை குறித்து நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும் என்றார்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger