சில குழந்தைகள் பார்க்கும் இடத்தில் இருக்கும் மண்ணை அள்ளி வாயில் போட்டுக் கொள்வார்கள். இதனைத் தடுக்க குழந்தைகளை அடிப்பதோ, திட்டுவதோ மிகவும் தவறு.
ஓமம், மிளகு, துளசி, கீழாநெல்லி வேர், கடுக்காய்த் தோல் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து கொள்ளவும். இதை 3 முதல் 5 நாட்கள் வரை ஒரு சங்களவு வீதம் உள்ளுக்கு கொடுக்க குழந்தைகள் மண் தின்பதை விட்டுவிடுவார்கள்.
குழந்தைகளுக்கு வயிறு இரைந்து நீராய் கழிச்சல் ஏற்படும். நீர் அதிகமாகப் போவதால் நாவறட்சியும் உண்டாகும். இதற்கும் ஓமம், வசம்பு, பூண்டு, பிரண்டை ஆகியவற்றை 5 கிராம் எடுத்து நீர்விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
அதில் 30 மில்லி அளவு காலை, மாலை இரு வேளையும் கொடுத்து வர உடல் நலம்பெறும்.
குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சினை ஏற்படும் போது ஓமத்தை நினைவில் கொள்ளவும். ஓமத்தை சுடுநீரில் போட்டு வெறும் நீரை மட்டும் கொடுத்தால் கூட குழந்தை நலமடையும்.
0 comments:
Post a Comment