Friday, April 23, 2010

கிரிக்கெட்டின் ராஜா - சச்சின்

டெல்லி: ஐபிஎல் சந்தித்துள்ள நெருக்கடிக்கு விரைவில் தீர்வு ஏற்படும். கிரிக்கெட் வெற்றி பெறும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் டெண்டுல்கர் கூறியுள்ளார்.ஐபிஎல் நெருக்கடியால் கிரிக்கெட் உலகம் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. தோண்டத் தோண்ட வெளி வரும் ஊழல்களால் அனைவரும் அதிர்ந்து போயுள்ளனர்.இந்த நிலையில் ஐபிஎல் சர்ச்சைகள் குறித்து டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற நெருக்கடிகளை சமாளித்து கரை சேரும் வகையில் கிரிக்கெட் விளையாட்டு உறுதியானது.பல கோடி பேர் விளையாட்டை ரசிக்கின்றனர். எனவே இதுபோன்ற பிரச்சினைகளெல்லாம் மிகச் சிறியவையே. விரைவில் இவை அனைத்தும் சரியாகும், கிரிக்கெட் விளையாட்டுக்கு வெற்றி கிடைக்கும்.வாழ்க்கை என்பது எப்போதும் இனிமையானதாகவே இருக்காது. சில நேரங்களில் கடுமையான சூழல்கள் வரும். அதை தாண்டித்தான் ஆக வேண்டும். எனவே இப்போது ஏற்பட்டுள்ள தடைகளைத் தாண்ட கிரிக்கெட் விளையாட்டு உதவும்.சாதாரண கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிதான் முக்கியம். இதுபோன்ற பிரச்சினைகளால் அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஐபிஎல் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வமாகவே உள்ளனர். ஐபிஎல் போட்டிகளை டிவிகளில் பார்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர். எந்த விளையாட்டாக இருந்தாலும், அதில் ஏற்படும் போட்டிதான் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. கிரிக்கெட் இதில் விதி விலக்கல்ல.தற்போது எழுந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு ஏற்பட்டு கிரிக்கெட் மீண்டும் புதுப் பொலிவடன் மக்களை மகிழ்விக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.தற்போதைய பிரச்சினையால் வீரர்கள் யாரும் கவனம் சிதற மாட்டார்கள். மைதானத்திற்குள் நுழைந்து விட்டால் எதிரணியினர் மட்டுமே அவர்களது கண்களுக்குத் தெரிவார்கள். மற்ற அனைத்தும் மறந்து போய் விடும்.மைதானத்திற்கு வெளியே ஆயிரம் நடக்கும். ஆனால் மைதானத்திற்குள் நுழைந்து விட்டால் எதிரணியை வீழ்த்த நாம் போட்ட திட்டங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும் என்றார் டெண்டுல்கர்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger