Thursday, April 29, 2010

இஸ்ரோ -ISRO


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, நிலாவுக்கு சந்திரயான்-1 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. அது, நிலாவில் தண்ணீர் இருப்பதை ஏற்கனவே கண்டுபிடித்தது. இந்நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு அடியில் குழிவான சுரங்கப்பாதைகள் இருப்பதை சந்திரயானில் உள்ள இந்திய கேமரா படம் பிடித்துள்ளது. எரிமலை வெடித்ததால் `லாவா' எனப்படும் எரிமலைக்குழம்பு வெளியானதை தொடர்ந்து, இந்த சுரங்கப்பாதைகள் உருவானதாக தெரிய வந்துள்ளது. இந்த சுரங்கப்பாதைகளில், எதிர்காலத்தில் மனிதர்கள் வசிக்கும் வாய்ப்பு இருப்பதாக, ஆமதாபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ரங்கநாத் ஆர்.நவல்குண்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, விஞ்ஞானிகள் மேலும் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger