கொச்சி அணி ஏல விவகாரம், சூதாட்டத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு உள்ள தொடர்பு, வெளிநாடுகளில் உள்ள கருப்பு பண முதலீடு என்று அடுத்தடுத்து ஐ.பி.எல். போட்டிகளை மையமான வைத்து எழுந்த சர்ச்சைகளினால் அதன் தலைவர் பொறுப்பில் இருந்து லலித்மோடியை நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஐ.பி.எல். போட்டிகளை மையமாக வைத்து சர்ச்சைகள் எழுந்ததையடுத்து அதன் தலைவர் பதவி மற்றும் ஆணையர் பதவியில் இருந்து லலித்மோடியை கிரிக்கெட் வாரியம் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்ததும் லலித்மோடிக்கு இ-மெயில் மூலம் இடைநீக்கம் உத்தரவும், அவர் மீதான 22 குற்றச்சாற்றுகள் பற்றிய தாக்கீதும் அனுப்பப்பட்டிருந்தன.
அதில், லலித்மோடியின் தவறான நடவடிக்கையினால் கிரிக்கெட் அமைப்பிற்கே அவப்பெயர் ஏற்பட்டு விட்டதாகவும், கடந்த சில நாட்களாக நடைபெற்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் கிரிக்கெட் வாரியத்திற்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாற்றுகள் அடிப்படையில் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படியும் லலித்மோடியிடம் கிரிக்கெட் வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது.
கிரிக்கெட் வாரியத்தின் துணைத் பதவி உள்பட லலித்மோடி வகிக்கும் கிரிக்கெட் தொடர்பான அனைத்து பதவிகளில் இருந்து அவரை இடை நீக்கம் செய்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது என்று அந்த இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் நீக்கப்பட்ட லலித் மோடிக்கு பதிலாக இடைக்கால ஐ.பி.எல். தலைவராக சிரயு அமின் அந்தலி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று கூடிய ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷஷாங் மனோகர், நீக்கப்பட்ட தலைவர் லலித் மோடி மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அறிவித்தார். மேலும் அது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்பதையும் தெரிவித்தார்.
"கடந்த சில தினங்களாக குற்றச்சாட்டுகளும், எதிர்குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டன. வாரியம் அந்தக் குற்றச்சாட்டுகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு லலித் மோடிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது." என்றார் ஷஷாங் மனோகர்.
"போட்டித் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், இந்த நோட்டீஸை இறுதிப் போட்டி முடிவடைந்த பிறகு அனுப்ப முடிவு செய்தோம்." என்று அவர் மேலும் கூறினார்.
லலித் மோடி 22 முறைகேடுகள் பட்டியலிடப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பி.சி.சி.ஐ. இடைக்காலக் குழுவை நியமித்துள்ளது. இதன் தலைவராக சிரயு அமின் அந்தலி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இடைக்காலக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரவி சாஸ்திரி, மன்சூர் அலிகான் பட்டௌடி, சுனில் கவாஸ்கர் ஆகியோரும் உள்ளனர்.
லலித் மோடியிடம் 34 பக்க குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டது. இதற்கான பதிலை அவர் 15 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் வெளிப்படையானது, ஊழலற்றது என்று லலித் மோடி தெரிவித்தார்.
வால் பையன் கமெண்ட் : விடுங்க மோடி சார் பிசிசிஐ இன் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று .
வாழ்த்துக்கள் CHIRAYU சார் ,அடுத்த IPL இதை விட சூப்பர் ஆக இருக்கும் என நம்புகிறோம்.
வால் பையன் கமெண்ட் : விடுங்க மோடி சார் பிசிசிஐ இன் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று .
வாழ்த்துக்கள் CHIRAYU சார் ,அடுத்த IPL இதை விட சூப்பர் ஆக இருக்கும் என நம்புகிறோம்.
0 comments:
Post a Comment