Friday, April 23, 2010
சூரியன் (புதியது)
வாஷிங்டன்: சூரியனில் நடக்கும் மாற்றங்களை இதுவரை அறியாத புதிய கோணத்தில் படம் பிடித்து வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம். பார்க்கவே படு பிரமிப்பாக இருக்கும் இநதப் படங்களை நாசாவின், சூரிய இயக்க கண்காணிப்பு செயற்கைக்கோள் எடுத்து அனுப்பியுள்ளது.சூரியனில் ஏற்படும் மின் காந்தப் புயல்கள், பீறிடும் பிளாஸ்மா ஆகியவற்றை நெருக்கமாகப் படம் பிடிக்க இந்த பிரத்யேக செயற்கைக் கோளை ஏவியது நாசா.இந்த செயற்கைக்கோள் எடுத்து அனுப்பியுள்ள அட்டகாசமான படங்களை விளக்கங்களுடன் வெளியிட்டுள்ளது நாஸா.கடந்த பிப்ரவரி 11ம் தேதி இந்த செயற்கைக் கோளை நாசா அனுப்பியது. இதுகுறித்து திட்ட தலைமை விஞ்ஞானி டீன் பெஸ்னல் கூறுகையில், சூரியன் குறித்த பல கருத்துக்களை இந்தப் புதிய படங்கள் பொய்யாக்கியுள்ளது என்றார்.நாசா ஹீலியோபிசிக்ஸ் பிரிவு இயக்குநர் ரிச்சர்ட் பிஷர் கூறுகையில், செயற்கைக் கோள் எந்தவித கோளாறும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. கொலராடோ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட சாதனம் உள்ளிட்ட பல முக்கிய கருவிகள் இந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் அதில் மூன்று கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment