Saturday, April 24, 2010
குளோபல் வார்மிங்
புவி வெப்பமடைதலால் கடல்களின் சில பகுதிகளில் நீர் உவர்மயமாகிறது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.ஆஸ்ட்ரேலிய விஞ்ஞானிகள் இத்தகைய ஆய்வில் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 60 ஆண்டுகளாக கடலின் மேற்பரப்பு நீர் மட்டுமல்லாது, அடியாழ நீரும் உப்புமயமாகி வருகிறது என்று கண்டுபிடித்துள்ள இந்த ஆய்வுக்குழுவினர், இது புவி வெப்பமடைதலால் ஏற்படும் மாற்றம் என்று தெரிவித்துள்ளனர்.கடல் நீரின் உவர்த் தன்மை பூமியில் பொழியும் மழையின் அளவு மற்றும் ஆவியாதல் நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. புவி வெப்பமடைதலால் ஏற்படும் அதிதீவிர வானிலை மாற்றங்கள் கடலின் சிலபகுதிகளை உவர் மயமாகவும் மற்றும் சில பகுதிகளில் நீரை உவரற்றதாகவும் செய்து வருகிறது என்று பால் டியூரக் என்ற ஆஸ்ட்ரேலிய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.கடலின் ஒரு பகுதியில் நீர் அதிகமாக ஆவியாகிறது என்றால் அப்பகுதியில் உப்புமயமாகிறது. ஆனால் அதிக மழை உள்ள பகுதிகளில் நீரின் உப்புத் தன்மைகுறைந்து அது சாதாரண நீராக மாறி வருகிறது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.கடல் நீரின் மேற்பரப்பு உவர் மயமாகும் சாத்தியம் மேலும் அதிகரிக்கும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.வெப்பப் பகுதிகளில் உள்ள அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் நீர் மேலும் உவர்மயமாகும் சாத்தியங்கள் தென் படுகிறது என்று கூறும் இந்த ஆய்வு மழை அதிகம் பொழியும் பகுதிகளில் கடல் நீர் தெளிவான நீராக மாறுகிறது என்று கூறுகின்றனர்.இதில் மர்மம் என்னவெனில் கடலின் மேற்பரப்பு நீர் அதிகம் ஆவியாவதால் அப்பகுதி நீர் உவர் மயமாவதில் ஒரு தர்க்க ரீதியான காரணம் உள்ளது. ஆனால் கடலின் அடியாழப்பகுதிகளில் உள்ள நீரும் உவர் மயமாகிவருவது குறித்து இன்னும் ஆய்வுகள் தேவை என்று டிஸ்கவரி சானல் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment