ஏன்? எதற்கு? எப்படி? இந்தக் கேள்விகளில்தான் அறி வியலே அடங்கியிருக்கிறது. மனிதன் எப்படித் தோன்றினான் என்ற கேள்வி எழுந்ததால்தான் டார்வின் கோட்பாடு கிடைத்தது. இதுபோலவே உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்வியும். இந்தக் கேள்விக்கும் பதில் உள்ளது.
‘ஆயிரத்து 370 கோடி ஆண்டு களுக்கு முன் அண்டவெளியில் நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறி அணுப்பொருட்கள் தோன்றின. பின்னர் அந்த அணுப்பொருட்கள் இணைந்தே கிரகங்களும், அதன் பின் உயிரினங்களும் தோன்றின’ என்கிறது உலகத்தின் தோற்றம் குறித்து சொல்லும் பெருவெடிப்புக் கொள்கை (பிக் பேங் தியரி).
வெடித்துச் சிதறிய அணுப் பொருட்கள் இணைந்து உருவான கிரகங்களில் ஒன்றுதான் நாம் வாழும் பூமி. தீப்பிழம்பாக இருந்த பூமி, படிப்படியாக வெப்பம் தணிந்து, எரிமலைகளாகவும் தீக்குழம்புகளாகவும் புகைந்து கொண்டிருந்தன. பின்னர் மீத்தேன், ஹைட்ரஜன், கார்பன் &டை&ஆக்ஸைடு ஆகியவை சேர்ந்து ‘காஸ்மிக் ஸூப்’ என்ற கலவை உருவானது. அதில் மின்னல் பாய்ந்தபோதே முதன் முதலாக அமினோ அமிலம் தோன்றியது. இந்த அமிலம் அமோனியாவுடன் சேர்ந்து படிப் படியாக உயிரினங்கள் தோன்றக் காரணமாக இருந்தது. உலகின் முதல் உயிரிகளின் தோற்றம் குறித்து புட்டுப்புட்டு வைக்கும் இந்தக் கோட்பாடு இதுவரை முற்றிலும் நிரூபிக்கப்படவில்லை. இதை நிரூபிப்பதற்காகவே 2008 செப்டம்பர் 10 அன்று ஜெனீவா அருகில் பிரான்ஸ்&சுவிட்சர்லாந்து எல்லைப்பகுதியில் செயற்கை முறையில் அணு மோதல்&வெடிப்புச் சோதனை நடத்தப்பட்டது. அதன் பெயர் ‘அண்டப் பெருவெடிப்புக் கொள்கை பரிசோதனை’.
உலகிலேயே செயற்கையாக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அறிவியல் சோதனை இதுதான். இதை செர்ன் வெற்றிகரமாக முடித்துக் காட்டியது. இந்த ஆராய்ச்சியில் 85 நாடுகளைச் சேர்ந்த 8500 இயற்பியல் வல்லுனர் கள் ஈடுபட்டனர். இதில் 70 இந்தியர்களும் இடம் பெற்றனர். பூமிக்கடியில் 50 & 175 மீட்டர் ஆழத்தில், 27 கிலோமீட்டர் நீளம் கொண்ட நீள்வட்ட வடிவிலான பரிசோதனைக் கூடக் குழாயை இதற்காகவே உருவாக்கினர். ‘ஹார்ட்ரோன் கோலைடர்’ என்றழைக்கப்படும் அணுக்களை உமிழும் ராட்சதக் குழாய்கள் அமைக்கப்பட்டன. இக்குழாயின் விட்டம் 3.8 மீட்டர். கான்கிரீட் சுரங்கத்தில் இக்குழாயை அமைக்க மட்டுமே 17 ஆயிரம் கோடி செலவானது. இக்குழாய் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது என்பது இன்னொரு பெருமை!
இச்சோதனை எப்படி மேற் கொள்ளப்பட்டது? குழாய் அமைப்பின் இருமுனைகளிலும் பெரிய தூண் வடிவில் புரோட் டான் அணுத்துகள்களை உட்செலுத்தும் வகையில் தூண்கள் நிறுவப்பட்டன. டன் கணக்கிலான எடைகொண்ட இந்த இரு தூண் களும் எதிரெதிர் கடிகாரச் சுற்றில் சுற்றி மோதும். தூண்கள் மோதும்போது அதிலிருந்து புரோட்டான், எலக்ட்ரான் என ஏராளமான அணுத்துகள்கள் பெருகும். அவற்றின் எண்ணிக்கை நூறாயிரம் கோடி அளவில் இருக்கும். அப்போது சூரியனைப் போல பலமடங்கு வெப்பம் ஏற்படும். தூள் தூளாகப் பிரிந்த அணுத்துகள்கள் வினாடிக்கு 11 ஆயிரத்து 245 முறை என்ற வேகத்தில் அக்குழாயைச் சுற்றும்.
இச்சோதனை முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின் அதுபற்றிய எந்தத் தகவலும் உலகுக்குத் தெரியாமலேயே இருந்தது. பெரும் மோதலால் ஏற்பட்ட அணு மாற்றங்களை வெளியில் இருந்தபடியே விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். இதற்காகவே 85 நாடுகளில் உள்ள முக்கிய ஆய்வு மையங்களில் 60 ஆயிரம் சிறப்பு கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட்டன.
இந்நிலையில், முதல் கட்டமாக நடைபெற்ற பரிசோதனையில் அணுக் கள் மோதும் தூண்களில் உடைப்பு ஏற்பட்டது. இத னால் கசிவும் ஏற்பட்டது. இதன்பின் மாற்றுவேலைகள் மேற்கொள்ளப்பட்டு மார்ச் 30ம் தேதி இரண் டாம் கட்டமாக அதே சோதனையை மீண்டும் வெற்றி கரமாகச் செய்து முடித்துள்ளனர் செர்ன் விஞ்ஞானிகள்.
கடந்த முறை 2.36 லட்சம் கோடி கி.மீ. வேகத்தில் புரோட்டான் அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்தமுறையோ இது வரை இல்லாத அளவுக்கு 3 மடங்கு வேகத்தில், அதாவது 7 லட்சம் கோடி கி.மீ. வேகத்தில் புரோட்டான் அணுக்களை ஒன்றோடு ஒன்று மோதச் செய் துள்ளனர்.
இந்த மோதலால் புரோட்டான் அணுக்களில் ஏற்படும் மாறுதல் களை வைத்து உலகம் எப்படி, எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் என்று நம்பு கின்றனர் விஞ்ஞானிகள்.
இச்சோதனை சுற்றுச்சுழலை பாதிக்குமா? ‘ஏற்கனவே புவி சூடாகும் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் பூமிக்கடி யில் அணுக்களை மோத வைப்பதால், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெப்பம் உருவாகும். இது சுற்றுச்சூழலை கெடுத்துவிடும்’ என்று எச்சரிக்கின்றனர் சுற்றுச் சூழலாளர்கள். ஆனால், ‘எந்தப் பாதிப்பும் வராது’ என்கிறார் செர்ன் இயக்குனர் ஸ்டீவ் மையர்ஸ். ‘அதற்கான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சோதனை மையத்தில் செய்துள்ளோம். சுற்றுச்சூழல் கெடும் என்ற கேள்விக்கே இட மில்லை’ என்கிற அவர், ‘உலகம் எப்படித் தோன்றியது என்ற சோதனை, இன்னும் முதல் கட்ட முயற்சியில்தான் உள்ளது. அணுக்கள் இடையே ஏற்பட்ட மோதல்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். 2013&ல் ஆய்வு முடிவுகள் வெளியாகும்’ என்கிறார்.
0 comments:
Post a Comment