Sunday, April 25, 2010

நகர்ந்த நகரம்

பிப்ரவரி 27ஆம் தேதி சிலியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கம் காரணமாக நிலநடுக்க மையத்தில் சிக்கிய கன்செப்சியான் நகரம் மேற்கு நோக்கி 10 அடி நகர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.தென் அமெரிக்க நிலப்பகுதி சுமார் ஒரு அங்குலம் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. நிலநடுக்கத்திற்கு முன்பு இருந்த நிலைக்கும், நிலநடுக்கத்திற்கு பிறகு உள்ள நிலைக்கும் உள்ள வேறுபாடு செயற்கைக் கோள் படங்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜி.பி.எஸ். என்ற குளோபல் பொசிஷனிங் சாட்டிலைட் தொழில் நுட்ப உதவியுடன் ஆய்வு செய்யப்பட்ட முதல் நிலநடுக்க விளைவு இது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதன்படி தென் அமெரிக்க கண்ட நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கு பெருமள்:வு நகர்ந்துள்ளது. சிலி தலைநகர் சாண்டியாகோ மேற்கு-தென்மேற்கு திசை நோக்கி 11 அங்குலம் நகர்ந்துள்ளது.கன்செப்சியான் நகருக்கு வடகிழக்கேயுள்ள வல்பரைஸோ, மென்டோசா ஆகிய நகரங்களும் குறிப்பிடத்தகுந்த அளவில் நகர்ந்துள்ளது.ஓஹியோ பலகலைக் கழக பேராசிரியர் மைக் பெல்விஸ் என்பவர் நிலநடுக்கத்திற்கு பிறகான புவி நிகழ்வுகளை 1993ஆம் ஆண்டு முதல் ஆராய்ந்து வருகிறார். தற்போதைய தொழில்நுட்ப உதவிகளுடன் நிலநடுக்கம் மட்டுமல்லாது, அது குறித்த பல்வேறு தரவுகளையும் பெற முடியும் என்று மைக் பெல்விஸ் தெரிவித்துள்ளார்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger