Saturday, June 5, 2010

செவ்வாய் தோஷம் - ஒர் அலசல்

 செவ்வாய் தோஷம் என்றாலே மக்கள் மத்தியில் சொல்ல முடியாத பயம் காணபடுகிறது
      செவ்வாய் கிழமையில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் உண்டு என்ற
ஆதாரமற்ற புரளி மக்கள் மத்தியில் காணபடுகிறது . இது தவறான கருத்தாகும் .
செவ்வாய் கிழமைக்கும் ,செவ்வாய் தோசத்திற்கும் சிறிது கூட சம்பந்தமில்லை .
     ஒரு ஜாதகத்தில் 2 , 4 , 7 , 8 , 12 போன்ற இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய்
தோஷம் என்று கூறபடுகிறது.
    செவ்வாய் ஜென்ம லக்னத்தில் இருந்தாலும் சிலர் செவ்வாய் தோஷம் என்று
வாதிடுவார்கள். இயற்கையிலேயே செவ்வாய் மிகவும் கொடியவர் . அவர் ஜென்ம
லக்னத்தில் அமைய பெற்று 7,8 போன்ற இடங்களை பார்வை செய்வதால் செவ்வாயின்
கொடிய பார்வை 7 , 8 போன்ற இடங்களுக்கு கிடைக்க பெறுவதால் செவ்வாய் லக்னத்தில் இருந்தாலும் " செவ்வாய் தோஷம்" தான்.
    ஜென்ம லக்னத்திலிருந்து செவ்வாய் தோஷம் பார்ப்பது போல் ,சந்திரன் நின்ற
ராசியிலுருந்தும் செவ்வாய் தோஷம் கணக்கிட வேண்டும் .
அது போல் சுக்கிரன் நின்ற ராசிக்கும் 1 , 2 , 4 , 7 , 8 ,12 ல் செவ்வாய் உள்ளாரா? என்றும்
பார்க்க வேண்டும் .
     செவ்வாய் தோசத்திற்கும் சில விதி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன ,செவ்வாய்
மேஷம் ,கடகம் ,விருச்சிகம் ,மகரம் போன்ற ராசிகளில் அமைய பெற்றால் செவ்வாய்
தோஷம் உண்டாவதில்லை .
      செவ்வாய் சூரியன் வீடாகிய சிம்மதிலே அமைய பெற்றாலும் ,கும்பத்திலே
அமைய பெற்றாலும் செவ்வாய் தோஷம் உண்டாகாது .
    செவ்வாய் பகாவான் குரு ,சூரியன் ,சனி போன்றவருடன் சேர்க்கை பெற்றாலும் ,
பார்வை பட்டாலும் செவ்வாய் தோஷம் ஏற்படுவதில்லை .
  சூரியனுடன் செவ்வாய் சேரும்போது செவ்வாய் தோஷம் அஷ்தங்கம் உண்டாகிறது .
   ஒரு பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் அவளை திருமணம் செய்து கொள்ளும் கணவனுக்கும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும் .
  இல்லா விட்டால் அந்த பெண்ணுக்கும் செவ்வாய் திசையோ அல்லது செவ்வாய்
புத்தியோ நடைபெற்றால் கண்டிப்பாக கணவனுக்கு கெடுதி உண்டாகிறது .
  செவ்வாயோடு புதன் சேர்ந்தாலும் ,புதன் பார்வை செவ்வாய்க்கு உண்டானாலும்
செவ்வாய் தோசத்திற்க்கு பரிகாரம் உண்டாகிறது .
    ஒரு பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் இருந்தால் எளிதில் திருமணம் ஆவதில்லை .
காலம் கடந்து திருமணம் நடைபெற்றாலும் ,தேவையில்லாத கருத்து வேறுபாடு
கணவன் , மனைவிக்குள் பிரிவு ,வாழ்வில் எப்போதும் சண்டை ,சச்சரவு போன்ற
அனுகூலமற்ற பலன்கள் உண்டாகின்றன .
     செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் பகவான் வழிபாடு செய்வதும் ,
செவ்வாய்க்கு அதிபதியாகிய முருக கடவுளை வணங்கி வழிபாடு செய்வது கெடுதிகளை
குறைக்கும் .

1 comments:

சுப்பு said...

மொட்டை மாடியில்
அவளுக்கும் நிலவுக்கும் சண்டை.
அதை தீர்க்க போன எனக்கும்
செயற்கை கோளுக்கும் சண்டை.

நட்சத்திரங்களுக்கு பொருத்தம் இல்லையாம்
கலிலீயோ ஒருவன் காரணம் சொன்னான்.

அரிஸ்டாட்டில் ஒருவன் அவள்
செவ்வாயில் தோஷம் என்று சொன்னான்.

செவ்வாயிலும் ஈரம் இல்லையாம்
நாசா விஞ்ஞானிகள் சிலர் கவலையில்.

செவ்வாயே, நீ பழித்தது போதும்,
ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி
எல்லாம் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்.

Related Posts with Thumbnails
 

Blogger