Wednesday, June 30, 2010

இன்றைய ராசிபலன் - 30.06.2010

 மேஷம்:
பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பணம் வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
 
ரிஷபம்:
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.
 
மிதுனம்:மாலைமணி 6.20 வரை சந்திராஷ்டமம் தொடர்ந்தாலும் தடைபட்ட வேலைகளை விடா முயற்சியால் முடிப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
 
கடகம்:
கணவன்,மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துபோகும். பூர்வீகச் சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மாலை மணி 6.20 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
 
சிம்மம்:உணர்ச்சிகளைகட்டுப்படுத்தி உயர் வதற்கான வழியை யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் சில மாற்ற ங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
 
கன்னி:
பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் நிர்வாகத்திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.
 
துலாம்:
நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப் பீர்கள்.பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும் நாள்.
 
விருச்சிகம்:
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். கணவன்,மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.
 
தனுசு:
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
 
மகரம்:
மாலை மணி 6.20 வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.
 
கும்பம்:
கணவன்,மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மாலை மணி 6.20 முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் நிதானம் தேவைப்படும் நாள்.
 
மீனம்:நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்பு, மரியாதை கூடும் நாள்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger