Monday, June 28, 2010

இன்றைய ராசிபலன் - 28.06.2010

 மேஷம்:
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.
 
ரிஷபம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன்,மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
 
மிதுனம்:   சந்திராஷ்டமம்தொடங்குவதால் சிலர் உங்களை விமர்சிப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
 
கடகம்:
பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
 
சிம்மம்:குடும்பத்தினர்உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.
 
கன்னி:
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.
 
துலாம்:
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
 
விருச்சிகம்:
பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
 
தனுசு:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த முன்கோபம், காரியத் தாமதம், வாக்குவாதம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
 
மகரம்:
ராசிக்குள் சந்திரன் செல்வதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. சிக்கனமாக இருங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
 
கும்பம்:
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
 
மீனம்:
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்க ங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

1 comments:

hayyram said...

ur daily service is gud. but i don belive these kind of commen "rasi palan".

thanks and regards,
ram

www.hayyram.blogspot.com

Related Posts with Thumbnails
 

Blogger