பங்குசந்தைகள் பற்றிய தகவல்களுக்கு:www.tradersfirst.blogspot.com
பங்குசந்தை நிலவரம்:
கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டெண் சராசரியாக 2.5 சதவீதம் உயர்ந்தது. இது 12 வாரங்களில் இல்லாத அளவாகும்.
கிரீஸ் நிதி நெருக்கடியால் கடந்த சில வாரங்களாக சர்வதேச பங்குச் சந்தைகள் சரிந்தன. இந்திய பங்குச் சந்தையிலும் இது எதிரொலித்தது.
கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 2.5 சதவீதம் உயர்ந்தது. வாரத்தின் துவக்கத்தில் சரிவு ஏற்பட்ட போதிலும், புதன்கிழமை முதல் மூன்று நாட்களாக தொடர்ந்து உயர்ந்தன. சராசரியாக 417 புள்ளிகள் (2.5%) உயர்ந்தது. இது கடந்த 12 வாரங்களில் இல்லாத உயர்வு.
இன்று ஐரோபிய பங்குசந்தைகளின் திடீர் சரிவால் இந்திய பங்குசந்தைகள் 2.2% வரை
சரிவை சந்தித்தன. இரவு அமெரிக்க பங்குசந்தைகளின் போக்கும், நாளை ஆசிய பங்கு
சந்தைகளின் போக்கையும் வைத்து தான் நாளை இந்திய பங்குசந்தைகளின் போக்கு
அமையும். நிபிட்டி 4930 வலுவான தடை நிலையாக அமையும் .இந்தநிலை உடைபடும்
போது இந்திய பங்குசந்தைகள் பெரும் சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது.
நிபிட்டி 4980 - 5130 - 5150 - 5180 RESISTANCE .
பொருளாதார வளர்ச்சி:
கடந்த 2009 -2010 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்ட 7.2 சதவீதத்தைவிட அதிகம்.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) குறித்த புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் நிறுவனம் (சிஎஸ்ஓ) நேற்று வெளியிட்டது.
இதில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில் பொருளாதாரம் 8.6 சதவீதம் வளர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் இது 5.8 சதவீதமாக இருந்தது. உற்பத்தித் துறை வளர்ச்சி 16.3 சதவீதம் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.
இதன்மூலம், கடந்த நிதியாண்டில் சராசரியாக 7.4 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் உயரும் என மத்திய அரசு ஏற்கனவே கணித்திருந்தது. அதை வளர்ச்சி தாண்டி விட்டது.
இதில் உற்பத்தித் துறை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இத்துறை சராசரியாக 10.8 சதவீதம் வளர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் பருவமழை போதுமான அளவுக்கு பெய்யாத போதிலும், வேளாண் துறை 0.2 சதவீதம் வளர்ந்துள்ளது. இது எதிர்பார்த்த அளவைவிட அதிகம். இத்துறையின் வளர்ச்சி 0.2 சதவீதம் சரியும் என கணிக்கப்பட்டிருந்தது.
மின்சாரம், எரிவாயு மற்றும் தண்ணீர் விநியோக வளர்ச்சி 6.5 சதவீதமாக உள்ளது. இது ஏற்கனவே மதிப்பிடப்பட்ட 8.2 சதவீதத்தைவிட குறைவு. நாட்டின் தனிநபர் சராசரி வருமானம் கடந்த நிதியாண்டில் ஆண்டுக்கு ரூ.44,345 ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் ரூ.40,141ஐ விட 10.5 சதவீதம் அதிகம்.
சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக, 2008&09 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக குறைந்தது. அதற்கு முந்தைய சில ஆண்டுகளில் 9 சதவீதத்தை ஒட்டி இருந்தது.
நிதி நெருக்கடியிலிருந்து உலக பொருளாதாரம் மீண்டு வருவதால், பொருளாதார வளர்ச்சி மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 8.5 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் மீண்டும் 9 சதவீதமாகவும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி பங்கு சந்தைகளை ஊக்குவிக்கும்.பங்குசந்தைகள் NIFTY 5200 தடை இல்லாமல் செல்ல உதவும்.
0 comments:
Post a Comment