Saturday, June 12, 2010

உலக கோப்பை கால்பந்து திருவிழா

 உலக கோப்பை கால்பந்து போட்டி தென் ஆப்ரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில், வண்ணமயமான கலைநிகழ்ச்சியுடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி, இந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. மொத்தம் 204 நாடுகளின் அணிகள் பங்கேற்ற தகுதிச் சுற்றின் முடிவில், உலக கோப்பையில் விளையாட 32 அணிகள் தகுதி பெற்றன. இந்த அணிகள் மோதும் பிரதான சுற்று, தென் ஆப்ரிக்காவில் நேற்று தொடங்கியது.
பரிசு மழை:
உலக கோப்பையைக் கைப்பற்றும் அணிக்கு முதல் பரிசாக ரூ.138 கோடி வழங்கப்பட உள்ளது. இந்த உலக கோப்பையில் வழங்கப்பட உள்ள மொத்தப் பரிசுத் தொகை ரூ.2,000 கோடி. இப்போட்டி ஜூலை 11ம் தேதி வரை நடக்க உள்ளது.
தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில் தொடக்க விழா நடைபெற்றது.
தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா, ஐ.நா. பொதுச் செயலர் பான்கி மூன், மெக்சிகோ அதிபர் பெலிப் கால்டரான், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் செப் பிளாட்டர் உட்பட அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், பிபா நிர்வாகிகள் பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
     சாம்பியன்கள் இதுவரை....
ஆண்டு  சாம்பியன்     2வது இடம்          நடத்திய நாடு
1930       உருகுவே        அர்ஜென்டினா     உருகுவே
1934       இத்தாலி  செக்கோஸ்லோவேகியா  இத்தாலி
1938      இத்தாலி       ஹங்கேரி                              பிரான்ஸ்
1950     உருகுவே         பிரேசில்                               பிரேசில்
1954     மேற்குஜெர்மனி ஹங்கேரி                      சுவிட்சர்லாந்து
1958      பிரேசில்               ஸ்வீடன்                           ஸ்வீடன்
1962      பிரேசில்          செக்கோஸ்லோவேகியா  சிலி
1966      இங்கிலாந்து         மேற்கு ஜெர்மனி             இங்கிலாந்து
1970       பிரேசில்                இத்தாலி                              மெக்சிகோ
1974      மேற்கு ஜெர்மனி  நெதர்லாந்து                    மேற்கு ஜெர்மனி
1978       அர்ஜென்டினா       நெதர்லாந்து                    அர்ஜென்டினா
1982        இத்தாலி                மேற்கு ஜெர்மனி              ஸ்பெயின் 
1986        அர்ஜென்டினா     மேற்கு ஜெர்மனி              மெக்சிகோ
1990       மேற்கு ஜெர்மனி  அர்ஜென்டினா                   இத்தாலி
1994         பிரேசில்                  இத்தாலி                             அமெரிக்கா
1998         பிரான்ஸ்                 பிரேசில்                             பிரான்ஸ்
2002         பிரேசில்                   ஜெர்மனி                      தென் கொரியா
2006        இத்தாலி                   பிரான்ஸ்                              ஜெர்மனி

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger