Monday, June 14, 2010

இன்றைய ராசிபலன் - 14.06.2010

 
 மேஷம்:
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தை முடிக்கும் நாள்.
 
ரிஷபம்:
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சகஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
 
மிதுனம்:
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். முன் கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சிக்கனம் தேவைப்படும் நாள்.
 
கடகம்:
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். வெளிவட்டாரத்தில் நிதானித்து செயல்படுங்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
 
சிம்மம்:
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அமோகமான நாள்.
 
கன்னி:
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
 
துலாம்:
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப் பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
 
விருச்சிகம்:
சந்திராஷ்டமம் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சொந்தபந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பொறுமை தேவைப்படும் நாள்.
 
தனுசு:
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துபோகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும் நாள்.
 
மகரம்:
பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் மதிப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வழக்கு சாதகமாக திரும்பும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
 
கும்பம்:
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.
 
மீனம்:
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து விலகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger