FREE TRADING LIVE IDEAS : visit my blog , www.tradersfirst.blogspot.com
மும்பை யின் 3 நாள் முன்னேற்றம் நின்று 337 புள்ளிகள் நேற்று சரிந்தது.
அமெரிக்காவின் வேலைவாய்ப்பு புள்ளிவிவரம் நேற்று வெளியானது. அதில் எதிர்பார்ப்பை விடக் குறைவான அம்சங்களே இருந்தன. அத்துடன், ஹங்கேரியில் கடன் நெருக்கடி ஏற்படக்கூடும் என்று அரசு எச்சரித்தது. இதனால், யூரோ மதிப்பு சரிந்தது. இந்த அம்சங்கள் நேற்று சர்வதேச பங்குச் சந்தைகளை பாதித்தன.
அதைப் பின்தொடர்ந்து மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. சர்வதேச காரணங்களுடன், பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற செய்தியும் சேர்ந்து கொண்டது. பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டதால் புள்ளிகள் மளமளவென வீழ்ச்சி கண்டன. முடிவில் சென்செக்ஸ் 337 புள்ளி சரிந்து 16,781ல் முடிந்தது.
நேற்று முன்தினம் வரை 3 நாட்களில் சென்செக்ஸ் 545 புள்ளிகள் உயர்ந்தது. அதன் பெரும்பகுதியை நேற்று ஒரே நாளில் இழந்தது. மே 25ம் தேதிக்குப் பிறகு மிகப் பெரிய வீழ்ச்சி இது. சென்செக்சின் 30 நிறுவனங்களில் 27 சரிவை சந்தித்தன. தேசிய பங்குச் சந்தை நிப்டி 101 புள்ளி சரிந்து 5,034ல் முடிந்தது.
இன்றும் பங்கு சந்தைகள் சரிவுடனேயே முடிந்துள்ளன.நிபிட்டி 4987 என்ற நிலையில்
முடிந்துள்ளன.ஒவ்வொரு நாளும் ஒரு விஷயம் சந்தையை தாக்க தொடங்கியுள்ளது .
க்ரீஸ் பிரச்சினைக்கு பிறகு இப்பொழுது புதிதாக ஹங்கேரியும் சேர்ந்துள்ளது.
இதுமாதிரி இன்னும் எத்தனை நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்திதுள்ளனவோ?
வரும் வாரங்களில் தெரியும். என்னை பொறுத்தவரை ஜூலை மாதத்தில் பங்கு
சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என தெரிகிறது.
எனவே முதலீட்டார்கள் கவனமுடன் இருக்கவும்.
0 comments:
Post a Comment