எந்த ஒரு காரியத்தையும் செய்யும் போது நாள்,நட்சத்திரம் பார்த்து செய்தால் தான்
நன்மை உண்டாகும். இதற்க்கு ஒரு பழமொழி கூட உண்டு.இரவில் செய்தாலும் அரவில்
செய்யாதே என்பதாகும் அது . எந்த ஒரு காரியத்தையும் இரவில் கூட செய்யலாம்.
ஆனால் அரவில் (ராகு காலத்தில்) செய்யக்கூடாது.
அரவு என்றால் பாம்பு ஆகும்.ராகுவையே இங்கு பாம்பு என்கிறோம்.தினமும்
நாம் நல்ல நேரம் பார்க்கும் போது ராகுகாலம்,எமகண்டம் இதை தான் முதலில்
பார்க்கிறோம் .அந்த ராகுகாலமே அரவு நேரம் என்பதாகும் .ஒவ்வொரு நாளும் 1.30
மணி நேரம் இந்த ராகு காலம் ஆட்டி படைக்கிறது.இந்த நேரத்தில் எந்த சுபகாரியதிலும்
ஈடுபடுதல் கூடாது என்பது விதி.அப்படி மீறி செய்யும் காரியங்கள் சுகமான முடிவை
தருவதில்லை. இருந்தாலும் சில விதி விலக்குகளும் உண்டு . அவை :
ராகு நட்சத்திரமாகிய திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்க்கு
சாதரணமாக ராகுகாலம் கெடுதி செய்வதில்லை .அதே போல் ஒருவர் ஜாதகத்தில்
ராகு லக்னத்திற்கு 3,6,11 ல் அமைய பெற்று காணபட்டாலும்,மேலும் ராகு மேஷம் ,
ரிஷபம் ,கடகம் ,கன்னி ,மகரம் ஆகிய இடங்களில் இருந்தாலும் ராகு காலம் கெடுதி
செய்வதில்லை .
Saturday, June 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment