மசாலா அதிகம் இல்லாத சைவ உணவும், கொஞ்சம் பீரும் போதும். வாழ்வில் செஞ்சுரி அடிக்கலாம் என்கிறார் 120 வயதை கடந்த மூதாட்டி.
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகேயுள்ள ராங்மோங்வே கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மூதாட்டி கரங் தெரோன்பி. இவருக்கு 90 வயதில் மகள் உள்ளார். உறவினர்களிடம் விசாரித்ததில் பாட்டிக்கு 120 வயது இருக்கும் என்கின்றனர். உடல் பலவீனமாக இருந்தாலும் பாட்டியின் பார்வை நன்றாக உள்ளது. குரலும் சத்தமாக இருக்கிறது.
‘உங்க ஆயுசு நீடிப்பதன் ரகசியம் என்ன’ என்று பாட்டியிடம் கேட்டால் சிரிக்கிறார். ‘‘இதுல ரகசியம்லாம் ஒண்ணுமில்ல. எல்லாரும்போல தினமும் அரிசி சாதம், வேக வைத்த காய்கறிதான் சாப்பிடுறேன். மசாலா அதிகம் சேர்த்துக்க மாட்டேன். இங்கு கிடைக்கற ‘ஹார்’ என்ற அரிசி பீர் தினமும் குடிப்பேன். காரமில்லாத சைவ டிஷ். அவ்வளவுதான்’’ என்கிறார். கரங் போல் ஒரு டஜன் பாட்டிகள் இந்த கிராமத்தில் வசிக்கின்றனர். எல்லோருமே காரமில்லாத உணவுதான் சாப்பிடுகின்றனர். ஜான் கதர் என்ற முதியவர் கூறுகையில், ‘‘புகையிலை பொருட்களை நாங்கள் பயன்படுத்துவதே இல்லை’’ என்கிறார்.
0 comments:
Post a Comment