Monday, September 20, 2010

காதலிலே நீ எந்த வகை?

 அழகான ஒரு பெண் நம்மை கடந்து போனால் நம் பார்வை தன்னாலே அவள் பின்னாலே போகும். அந்த அழகி கடந்து செல்லும் வரை வைத்த கண்கள் அகலாது. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே... நீங்க சொல்ல வந்த மேட்டருக்கு வாங்க என்கிறீர்களா...?
எது எதுக்கோ ஆராய்ச்சி செய்து பல ‘அரிய’ தகவல்களை அள்ளி வீசும் விஞ்ஞானிகளும் நிபுணர்களும் பெண்களை விழுங்கும் ஆண்களின் கிளுகிளு பார்வை ரகசியத்தை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? அதுபற்றியும் தீவிரமாக ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர் உளவியலாளர்கள். ஆண்களின் பார்வை ரசனையை வைத்தே அவர்களின் பார்வையில் காதல் இருக்கிறதா அல்லது காமம் இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து விடலாமாம். பெண்களின் முக வசீகரத்தை ரசிக்கும் ஆண்கள், நீண்டகாலம் காதலோடு வாழ்கிறார்கள், நெளிவுசுளிவான உடலை மட்டும் ரசிக்கும் ஆண்கள் காமத்துடன் கூடிய குறுகிய கால காதலையே விரும்புகிறார்கள் என்பதுதான் ஆராய்ச்சியின் முடிவாம்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஜெமைன் கான்பர் உள்பட மனோதத்துவ நிபுணர்கள் ஒன்று சேர்ந்து, 192 ஆண்கள் மற்றும் 183 பெண்களிடம் இந்த கிளுகிளு ஆய்வை நடத்தியுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட ஆண்களிடம், தேவதை போன்ற பெண்ணின் படத்தை காட்டி ரசிக்க செய்தனர். பின்னர் அவர்களிடம் கருத்து கேட்டபோது சிலர், ‘இந்தப் பெண்ணுடன் நீண்ட நாள் காதலோடு வாழ விரும்புகிறேன்’ என்றனர். வேறு சிலர் ‘ஒரு நாளாவது இவளோட வாழ்ந்துடணும்’ என்ற ரீதியில் பேசினர். முதலாவது ரக ஆண்கள், பெண்களின் முக வசீகரத்தை மட்டும் ரசித்தவர்கள். இரண்டாவது வகையினர், முகத்தை விட்டு மற்ற பாகங்களை ரசித்தவர்கள்.
இதே நிலைதான் ஆண்களை ரசிக்கும் பெண்களிடமும். பாலின பாகுபாடு இன்றி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 61 சதவீத ஆண்களும், 69 சதவீத பெண்களும் முக அழகில் மயங்கியுள்ளனர். மற்றவர்கள் உடல் வனப்பில் கவரப்பட்டுள்ளனர்.
பெண்களின் முக அழகை ரசிக்கும் ஆண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது என்பது ஆய்வின் கூடுதல் டிப்ஸ். இதுக்கெல்லாம் ஒரு ஆய்வு தேவையா... இதுதான் உலகத்துக்கே தெரிந்த விஷயமாச்சே என்று நீங்கள் பொருமுவது கேட்கிறது. என்ன செய்வது?

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger